மகனை இழந்த 2 வாரத்திலேயே இப்படியொரு துயரமா! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது! பிரபல நடிகையை தொடரும் சோகம்!!

தமிழ் சினிமாவில் 1976ம் ஆண்டு வெளிவந்த ஓ மஞ்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்


actress kavitha husband dead due to corono

தமிழ் சினிமாவில் 1976ம் ஆண்டு வெளிவந்த ஓ மஞ்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கவிதா.அதனை தொடர்ந்து அவர் பல பிரபலங்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை கவிதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் கால்பதித்த அவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியலில்முக்கிய நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் மற்றும் கணவர் தசரத ராஜ் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். 

corono

ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு, சிகிச்சை பலனில்லாமல் நடிகை கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்தார். அந்த துக்கத்திலும் கணவராவது மீண்டு வருவார் என அவர் நம்பிக்கையோடு இருந்தநிலையில் அவரும் உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மகனை இழந்த 2 வாரத்திலேயே கணவரையும் பறிகொடுத்து துயரத்தில் தவிக்கும் நடிகை கவிதாவுக்கு திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

corono