தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்திரை நடிகை...!



actress-kalyani-blessed-with-baby

தமிழ் சினிமாவில் புதிய புதிய பிரபலங்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு தகுந்தாற்போல் மக்களும் புதிய கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் நடிப்பு பிடித்திருந்தால் அவர்களை வளர்த்து விடுகிறார்கள். 

ஆனாலும் முன்தயாண்டுகளில் இருந்து பழைய பிரபலங்கள் ஒரு சிலரை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒருவர் தான் நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி. 

தன்னுடைய சின்ன வயதிலேயே திரைத் துறைக்குள் நுழைந்து, குட்டிச் சுட்டிப் பெண்ணாக வலம்வந்தவர் நடிகை கல்யாணி. `ஜெயம்' படத்தில் இவருடைய க்யூட் ரியாக்‌ஷன்ஸ் பலரையும் கவர்ந்தது. பிறகு, `பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பின் திருமணத்துக்காக பிரேக் எடுத்தவர், ஆங்கராக ரீ-என்ட்ரி கொடுத்தார். இவருடைய துருதுரு பேச்சுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

சினிமாவில் ஜொலித்து வந்த அவர் குடும்பத்தில் சில சோகங்களை அனுபவித்து பின் ரோஹித் என்பவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமாக இருந்த கல்யாணிக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் போட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.