சினிமா

வெளிநாட்டில் சமையல் வேலை பார்க்கும் பிரபல முன்னணி நடிகை! வெளியான வியப்பூட்டும் காரணம்!

Summary:

Actress jayasree working as cooking

தமிழ் சினிமாவில் 80-களில் தென்றலே என்னைத் தொடு, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட  பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜெயஶ்ரீ.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தார். 

இவர் திருமணமாகி 30 ஆண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு எம்.எஸ் டிகிரி முடித்த அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.

 இந்நிலையில் ஆதரவற்ற மக்களுக்காக அமெரிக்க அரசு நடத்திவரும் காப்பகம் ஒன்றில் தன்னார்வலர்கள் பலரும்  பணியாற்றுகிறார்கள். அவர்கள் தரமான உணவு தயாரித்து, அங்குள்ளவர்களுக்கு அன்புடன் பரிமாற வேண்டும்.

இந்நிலையில் ஜெயஶ்ரீயும் காப்பகத்தில் சமையல் பணியில் தன்னார்வலராகப் பணியாற்றுகிறார். மேலும் அவ்வபோது அவரது மகன் அர்ஜுனும் அந்த பனியில் ஈடுபடுகிறார். மேலும் பல   காப்பகத்திலும் உணவு சமைத்து வருகிறார். 


Advertisement