வாவ்.. அநியாயத்துக்கு அழகா இருக்கே.. இலியானா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!



actress-ileana-rapid-video

நடிகை இலியானா வெளியிட்டுள்ள முயல் குட்டி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இலியானாவின் இடுப்பே அவரை மேலும் பிரபலமாக்கியது.

பின்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து திருமணமும் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் அவர் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், முயல் குட்டி துள்ளி குதித்து ஓடும் கியூட் வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்ஸை பெற்று வருகிறது.