என்னடா சோதனை இது.! திடீரென முடிந்த திருமணம்.! தற்போது மீண்டும் யோகி பாபுவுக்கு இப்படி ஒரு சிக்கலா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்ளின் படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துவருகிறார் யோகிபாபு.
இந்நிலையில், பார்கவி என்ற பெண்ணை தனது குலதெய்வ கோவிலில் வைத்து கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார் யோகிபாபு. திடீரென நடந்த இந்த திருமணத்தில் குடும்பத்தினர், ஒருசில உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, விரைவில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என யோகிபாபு கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, கேப்டன் விஜயகாந்த், தமிழக முதல்வர், துணை முதல்வர் என பல்வேறு பிரபலங்களுக்கு நேரில் சென்று பத்திரிகை வழங்கினார் யோகிபாபு. ஆனால், கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைப்பது குறித்து அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.