நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம்! பெண் யார் தெரியுமா? அப்போ அவங்க இல்லையா?

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக திருமணம் நடைபெறாத பிரபல நடிகர்களில் விஷாலும் ஒருவர். இந்நிலையில் விஷாலுக்கு ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியும், விஷாலும் நீண்ட வருடங்களாக காதலிப்பதாகவும், பின்னர் ஒருசில சண்டையால் பிரிந்த இவர்கள் பின்னர் மீண்டும் ராசியாகிவிட்டதாகவம் செய்திகள் வந்தது.
வரலட்சுமி என் உயிர் என நடிகர் விஷால் வசனமெல்லாம் பேசினார், மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்பு திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஷால்.
சங்க கட்டிட பணி கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது. இந்நிலையில் விஷாலுக்கு அவர் வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினார்களாம். ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணை பிடித்துப் போய்விட்டதாம். அனிஷா என்கிற அந்த பெண்ணையே விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம் பெற்றோர்.
மேலும் விரைவில் விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் தெரிகிறது. அப்போ வரலட்சுமியின் நிலை என்னவென்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.