கேப்டன் மகனின் படைதலைவன்.! 4 நாட்களில் செய்துள்ள வசூல் இவ்வளவா.! வெளிவந்த தகவல்!!
நடிகர் வடிவேலு மகனா இது? அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறாரே! வைரலாகும் புகைப்படம் இதோ

நடிகர் வடிவேலுவின் மகன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுக்கு அறிமுகமே தேவை இல்லை. சிறிய குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் பரிட்சயமான நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. தற்போது இவரை அதிகம் திரையில் பார்க்கமுடியவில்லை என்றாலும் இவரது நகைச்சுவை இன்றும் நம்மளைவிட்டு மறையவில்லை.
இன்றும் எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும் ஏதாவது ஒரு சீனில் அவர் வந்துவிடுவார். அந்த அளவிற்கு சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் வடிவேலு. இவர் என்னதான் பிரபலமாக இருந்தாலும் இவரது குடும்ப புகைப்படம் அந்த அளவிற்கு இணையத்தில் அதிகம் வெளியானது இல்லை.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் மகனின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வடிவேலு மகன் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் அட, அவரது மகனும், அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறாரே என கூறி வருகின்றனர்.