அட.. சின்ன பையன்னு நினைச்சா, இவருக்கு கல்யாணமாகி குழந்தையே இருக்கா! அவரோட மனைவி யார்னு பார்த்தீர்களா!!
அட.. சின்ன பையன்னு நினைச்சா, இவருக்கு கல்யாணமாகி குழந்தையே இருக்கா! அவரோட மனைவி யார்னு பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த ஆயுதம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் உதயராஜ். அதனை தொடர்ந்து அவர் தனுஷ், விஜய் என பல முன்னணி பிரபலங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
அதனை தொடர்ந்து உதயராஜ் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் உதய ராஜின் நடிப்பு பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவர் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் பார்ப்பதற்கு சின்ன பையன் போல உதயராஜ்க்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாம். அவர் திரௌபதி படத்தில் ஹீரோயினின் தங்கையாக நடித்த ஜனனியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளதாம். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.