சினிமா

நடிகர் சூர்யா முதன்முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா செம ஷாக்காகிருவீங்க!

Summary:

நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் தான் முதன்முதலாக பார்த்த வேலை மற்றும் வாங்கிய சம்பளம் குறித்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நேருக்கு  நேர் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி சாக்லேட் பாயாக, ஆக்சன் ஹீரோவாக ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

இந்நிலையில் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 12 தீபாவளியை முன்னிட்டு ஓடிடிதளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து கூறியுள்ளார்.

அதில் அவர், நான் எனது அப்பாவை போல சினிமாவிற்கு வரவேண்டும் என நினைத்தது கிடையாது. முதலில் ஜவுளி தொழிற்சாலையில்தான் வேலை கிடைத்தது. 18 மணி நேர வேலை. எனது முதல் சம்பளம் ரூ.736. ஒரு வெள்ளைக் கவரில் போட்டுதான் கொடுத்தார்கள். அதன் எடையைக் கூட நான் இன்னும் மறக்கவில்லை என்று கூறியுள்ளார்.


Advertisement