தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
செம படமாச்சே! இதன் 2ம் பாகம் உருவாகுமா? எதிர்பார்ப்பில் கமல் ரசிகர்கள்! பிரபல நடிகர் கூறிய பதிலை பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வெளிவந்த வண்ணம் உள்ளது. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சண்டக்கோழி, சாமி, வேலையில்லா பட்டதாரி, காஞ்சனா, அரண்மனை என பல படங்களின் 2ம் பாகங்கள் வெளிவந்துள்ளன. மேலும் தற்போது கூட கமல் நடிப்பில் இந்தியன் 2 தயாராகி வருகிறது.
இதற்கிடையே 2020 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான திரைப்படம் பஞ்சதந்திரம். இதில் ஜெயராம், ஸ்ரீமன், யூகிசேது, நாகேஷ், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்நிலையில் பஞ்சதந்திரம் படத்தின் 2ம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய நடிகர் ஸ்ரீமன், நிறைய பேர் என்னிடம் இதே கேள்வியை கேட்டு வருகின்றனர். எனக்கு தெரிந்த பதில் என்னவென்றால் கமல்ஹாசன் முடிவு செய்தால் அது நடக்கும். இது நடக்குமா இல்லையா? என உங்களைப்போல் நானும் படக்குழுவினருடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.