அட..! பப்ளிமாஸ் கண்ணன்.. நடிகர் சிபிராஜ் சின்ன வயசில் எப்படி இருக்காருன்னு பாருங்க.. வைரல் புகைப்படம்..



Actor sibi raj childhood photos

நடிகர் சிபிராஜின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களில் சிபிராஜும் ஒருவர். இவர் பிரபல நடிகர் சத்யராஜின் மகன் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. என்னதான் சினிமா பிரபலத்தின் வாரிசாக இருந்தாலும், தனித்துவமான கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் சிபிராஜ்.

Sibi raj

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார் சிபிராஜ். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Sibi raj

பிரபல நடிகர், காமெடி மன்னன் நடிகர் கவுண்டமணி அவர்களுடன் சத்யராஜின் மனைவி, மகன் சிபிராஜ், மகள் ஆகியோர் எடுத்துக்கொண்ட 90 ஸ் கால புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே சிபிராஜ்ஜா இது? சின்ன வயசுல இப்படி பப்ளிமாஸ் மாதிரி இருந்துருக்காரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Sibi raj