அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
விஞ்ஞானியாக களமிறங்கும் மாதவன்; வீடியோ வைரலாகி வருகிறது.!
விஞ்ஞானியாக களமிறங்கும் மாதவன்; வீடியோ வைரலாகி வருகிறது.!

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதனைத் தொடர்ந்து நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகவும் பிரபலமானார்.
அவர் தமிழ் சினிமாவை தவிர ஹிந்தி மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இஸ்ரோவில் பணிபுரிந்த கேரளாவை பூர்வீகமாக கொண்ட அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் புதிய படத்தில் விஞ்ஞானியாக நடிகர் மாதவன் நடிக்கிறார் .
விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994ஆம் ஆண்டு இந்தியாவின் ரகசியங்களை வெளிநாட்டிற்கு கசியவிட்ட உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு 1996ம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவர் நிரபராதி என்று குறிப்பிடப்பட்டு மானநஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சம் வழங்கப்பட்டது.