பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் கார்த்தி! அழகிய புகைப்படம் இதோ..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உமையாள் எனும் அழகிய பெண் குழந்தையும் கந்தன் என்னும் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நடிகர் கார்த்தி தனது இரு பிள்ளைகளுடன் வாக் செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். முதல் முறையாக தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.