ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அவன் இவன் பட நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! வெளிவந்த புகைப்படம்! பதறிப்போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரும், நடிகருமாக வலம் வந்த ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் பிரபு மற்றும் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
பின்னர் நடிகராகவும் களமிறங்கி அவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவர் பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த அவன் இவன் படத்தில் நடித்த ஜமீன்தார் கதாபாத்திரம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானது. இந்நிலையில், ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசியு பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.