"பிழைக்கமாட்டேன் என கை விரித்த மருத்துவர்கள்..." மீண்டு வந்தது எப்படி.? நடிகர் பாலா பேட்டி!

"பிழைக்கமாட்டேன் என கை விரித்த மருத்துவர்கள்..." மீண்டு வந்தது எப்படி.? நடிகர் பாலா பேட்டி!


actor-bala-shares-his-difficult-times-during-interview

தமிழ் சினிமாவில் அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சொந்த சகோதரர் ஆவார். காதல் கிசுகிசு மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

actorbala

தற்போது அந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு நலமுடன் திரும்பி இருக்கும் அவர் தனது கடினமான காலம் குறித்து பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் மருத்துவர்கள் தனக்கு என்ன சிகிச்சை அளித்தாலும் அது பலனளிக்காது என்று கைவிரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரது சகோதரரும் சகோதரியும் மருத்துவர்கள் இடம் இது உங்கள் தம்பியாக இருந்தால் இப்படி பதில் சொல்வீர்களா என கேட்டதற்கு மருத்துவர்கள் எனது தம்பியாக இருந்தால் நிம்மதியாக மரணிக்க விடுவேன் என்று பதில் அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

actorbala

எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் திடீரென தனது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தனது உயிரை காப்பாற்றியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கஷ்டமான காலகட்டத்தில் தன் மீது கோபத்தில் இருந்தவர்களும் மனஸ்தாபத்தில் இருந்தவர்களும் கூட மருத்துவமனையில் வந்து தன்னை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். வெகு விரைவிலேயே மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வருவேன் எனவும் அவர் உறுதியுடன் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.