அதிரடி அரசியல் காட்டும் தவெக! திமுக வின் முக்கிய நிர்வாகி தவெக வில் இணைவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியல் களத்தில் உறுதியாக காலடி எடுத்து வைத்த பிறகு, அரசியல் கட்சி மாற்றங்கள் வேகமெடுத்துள்ளன.
விஜய் வருகையால் பரபரப்பான தேர்தல் களம்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையனின் அடுத்த அதிரடி சம்பவம்! தவெக விஜய்யுடன் இணையும் அதிமுக அமைச்சர்? அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி!
செங்கோட்டையன் பேச்சுவார்த்தை, கட்சி தாவல்
அதிமுகவின் மூத்த நிர்வாகியான தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததற்கு பிறகு, மாற்றுக் கட்சியினரின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை குறிவைத்து, செங்கோட்டையன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கட்சியில் இணைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் முன்னிலையில் முக்கிய நிர்வாகிகள் இணைப்பு
இந்த சூழலில் திமுக, அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர். காலை முதலே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்த இந்த நிகழ்வில், திமுக தஞ்சை மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஜெகதீச பாண்டியன், மறைந்த தலைவர் காமராஜரின் பேத்தி மயூரி, நடிகர் வேலராம மூர்த்தியின் மகன் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து இணைந்து வருவதால், தமிழக அரசியலில் தமிழக வெற்றிக்கழகம் ஒரு முக்கிய மாற்றுக் சக்தியாக உருவெடுத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கட்சி இணைப்புகள் அரசியல் கணக்குகளை மாற்றும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் கோட்டையை உடைத்த எடப்பாடி! அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்.! முழு வீச்சில் சூடு பிடிக்கும் அரசியல் களம்!