அட.. இவரா.! செம க்யூட்டாக இருக்கும் இந்த குட்டி பையன் எந்த பிரபல ஹீரோ தெரியுமா?? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

அட.. இவரா.! செம க்யூட்டாக இருக்கும் இந்த குட்டி பையன் எந்த பிரபல ஹீரோ தெரியுமா?? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!


Actor arun vijay childhood photo viral

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது மகன் அருண் விஜய். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக இவர் நடித்த பல படங்கள் தோல்வியே தழுவியது. 

ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இந்த நிலையில் அருண் விஜய் வில்லனாக இன்றி ஹீரோவாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது முன்னணி நடிகராகவும் திகழ்கிறார்.

arunvijay

அவரது கைவசம் தற்போது பார்டர், சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் உள்ளன. இந்த நிலையில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அருண் விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் அருண் விஜய்யா இது! செம க்யூட்டாக உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.