சினிமா

96 படம் நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா???

Summary:

96-padam-naangu-naatkalil-vasool

அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘96’. த்ரிஷா முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் வெளியானதில் இருந்து படத்தை பார்த்தவர்கள் தங்களது பள்ளி கால காதலை கண்டிப்பாக நினைவு கூர்ந்திருப்பார்கள்.

பலரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘காதலே காதலே’ என்ற பாடல் தான் அதிகம் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர்களை கதை மூலம் ஈர்த்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 10 கோடிக்கு வசூலித்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகமாகியுள்ளதால் படக்குழுவினர் அதிக சந்தோஷத்தில் உள்ளனர்.

 


Advertisement