தமிழகம் வர்த்தகம்

மீண்டும் அதிகரிக்க தொடங்கும் தங்கத்தின் விலை! சோகத்தில் இல்லத்தரசிகள்!

Summary:

gold rate again increased

தங்கம் மற்றும் வெள்ளி மக்களுக்கு அத்தியாவசிய பொருள் இல்லை என்றாலும், மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை போட்டிபோட்டு வாங்குகின்றனர். அதிலும் இல்லதரிசிகளுக்கு எவ்வளவுதான் தங்கம் வாங்கினாலும் திருப்த்தி அடையவே மாட்டார்கள். சமீபத்தில் சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்தது.

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம், ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து உயர்ந்து செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியாது.

இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றவாரம் தங்கத்தின் விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைந்தது. நேற்று காலை மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ. 42 உயர்ந்து ரூ.3,626-க்கும், 1 சவரன் ரூ. 29,008-க்கும் விற்பனையானது. 

இந்த நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. 1 கிராம் ரூ.3,625-க்கு விற்பனையானது. இதனால் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 29 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.


Advertisement