வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது: வியாபாரிகள் மகிழ்ச்சி..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது: வியாபாரிகள் மகிழ்ச்சி..!


commercial-usage-cylinder-price-revised-today

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.134 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக கொண்டு, மாதம் தோறும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதன் காரணமாக மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே  உயர்வை சந்தித்து வருகிறது.

எரிவாயு சிலிண்டர் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது. இவை இரண்டும் எடையில் வேறுபட்டு இருக்கும்.  இவற்றுல்  ஜூன் முதல் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

இந்த நிலையில் ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2,373க்கு விற்பனையாகிறது.

விலை குறைப்பின் காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் , டீக்கடை உரிமையாளர்கள் சற்று மனநிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.1,018.50க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியன்று  ரூ.250 உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் ரூ. 102. 50 உயர்ந்து, ரூ. 2,355.50-ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த மாதம் சற்று விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.