ஆன்லைன் வீடியோ காலில் திடீரென ஒளிபரப்பான ஆபாச வீடியோ.! பிரபல செயலியை தடைசெய்த முக்கிய நிறுவனங்கள்.!

ஆன்லைன் வீடியோ காலில் திடீரென ஒளிபரப்பான ஆபாச வீடியோ.! பிரபல செயலியை தடைசெய்த முக்கிய நிறுவனங்கள்.!



zoom-app-banned-in-google-and-important-places

கொரோனா காரணமாக இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலை சம்மந்தமாக, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த இப்படி பல்வேறு காரணங்களுக்கு வீடியோ கால்களை நம்பி உள்ளனர்.

அந்த வகையில், சிங்கப்பூரை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் அமெரிக்காவை சேர்ந்த ஜூம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் ஜூம் என்ற வீடியோ கால் செய்ய பயன்படும் செயலியை பயன்படுத்தி, மாணவர்களுக்கு வீடியோ மூலம் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.

Zoom

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வீடியோ காலில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த சம்பவம் உலகளவில் வைரலானதை அடுத்து சிங்கப்பூர் அரசு இந்த செயலியை அந்நாட்டில் பயன்படுத்த தடைவிதித்துள்ளது. ஹேக்கர்கள் உள்ளே நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜூம் செயலியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதை அடுத்து கூகுள், நாசா, ஆஸ்திரேலிய ராணுவம், நியூயார்க் அரசு பள்ளிகள் இப்படி பல்வேறு நிறுவனங்கள், அரசுகள் இந்த செயலியை பயன்படுத்த திடீர் தடை விதித்துள்ளது.