உலகம்

ஓ காட்.!! சவப்பெட்டிக்குள் 50 மணிநேரம் உயிருடன் வைத்து புதைக்கப்படும் நபர்.. திகிலூட்டும் வீடியோ காட்சிகள்..

Summary:

சவப்பெட்டிக்குள் உயிருடன் வைத்து வைத்து புதைக்கப்பட்டவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி

சவப்பெட்டிக்குள் உயிருடன் வைத்து வைத்து புதைக்கப்பட்டவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன். மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். பொதுவாக தனது சேனலில் இவர் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் 30 மில்லியன், 50 மில்லியன், பல நேரங்களில் 100 மில்லியன் பார்வைகள் வரை சென்று வைரலாவது உண்டு.

இதன்மூலம் பலகோடிகள் சம்பாதித்துவரும் இவர், தற்போது மிகவும் வித்தியாசமான மற்றும் ஆபத்தான முயற்சி ஒன்றை மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதாவது, சவப்பெட்டி ஒன்றில் தேவையான பொருட்கள், கேமிரா ஆகியவற்றுடன் இவரை உள்ளே வைத்து மண்ணில் புதைத்துவிடுகின்றனர்.

சுமார் 50 மணி நேரம் பூமிக்கு அடியில், சவப்பெட்டிக்குள் இருந்தவாறு ஜிம்மி டொனால்ட்சன் தனது நண்பர்களுடன் உரையாடுகிறார். பின்னர் 50 மணி நேரம் கடந்த பிறகு, அவரது நண்பர்கள் மீண்டும் அவரை சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுக்கின்றனர்.

இந்த வீடியோவை ஜிம்மி டொனால்ட்சன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளநிலையில், தபோதுவரை 55 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் தனது இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள ஜிம்மி டொனால்ட்சன், "எனது முதுகு ரொம்பவே வலிக்கிறது. நான் பீதியில் உறைந்து போயுள்ளேன். மனதளவில் வெறுமையாக உணர்கிறேன். இந்த அனுபவம் ரொம்பவே மோசமாக உள்ளது" என கூறியுள்ளார். எனினும் இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் கடும் வைரலாகிவருகிறது.


Advertisement