ஐந்து வகை வீடியோக்களுக்கு தடை விதித்த யூடியூப்! புதிய விதிகள் அமல்! இனி வருவாய் பெறுவது எப்படி தெரியுமா?



youtube-partner-new-rules-ai-content-demonetization

யூடியூப் தளத்தில் பார்ட்னர் புரோகிராமுக்குள் புதிய விதிமுறைகள் அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் காணொளிகள், AI உருவாக்கிய வீடியோக்கள், மற்றும் அசல் தன்மையற்ற உள்ளடக்கங்கள் இனிமேல் வருவாய் ஈட்ட முடியாத வகையில் அடையாளம் காணப்படும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

YouTube partner rules

அதாவது, ஸ்பேம் போன்ற பின்நிலை வீடியோக்கள், ஒரே காட்சி அல்லது ஸ்லைடுஷோக்கள், குறைந்த முயற்சியில் உருவாக்கப்படும் ரீயூஸ்ட் கண்டன்ட், மற்றும் முகம் தெரியாத போட் குரல் வீடியோக்கள் – இவை அனைத்தும் இனி மாணிடைசேஷனுக்குத் தகுதி பெறாது.

YouTube partner rules

AI உருவாக்கிய உள்ளடக்கம், இதில் முக்கியமாக பார்க்கப்படும் பகுதியாகும். ஸ்கிரிப்ட், குரல், வீடியோ காட்சிகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டால், அந்த வீடியோவில் மனித உழைப்புக் குறைவாக இருக்கிறது என யூடியூப் கருதுகிறது.

இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி பாய் போல வந்த பேரன்! மகிழ்ச்சியில் பாட்டி செய்த செயலையெல்லாம் பாருங்க.. நெகிழ்ச்சி வீடியோ இதோ...

மேலும், தவறான தலைப்புகள், சிருஷ்டிக்கப்பட்ட கோட்பாடுகள், மற்றும் புனைவு தகவல்களும் தடை நடவடிக்கைக்கு வழிவகுக்கும். இது யூடியூப் சேனலுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

YouTube partner rules

இதற்காக, யூடியூப் கிரியேட்டர்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ஸ்கிரிப்டை நீங்கள் எழுதுங்கள் அல்லது ஒரு மனித எழுத்தாளரிடம் தயார் செய்யுங்கள்

மனித குரல் பயன்படுத்தி வீடியோ உருவாக்குங்கள்

தனித்துவமான தகவல்களை, புதிய பார்வையுடன் வழங்குங்கள்

மீள்பயன்பாட்டை தவிர்த்து, நிஜமான முயற்சியுடன் காணொளி தயாரிக்கவும்

புதிய யூடியூப் விதிகளை பின்பற்றினால், மாணிடைசேஷனில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது. உண்மையான, தரமான, அசல் காணொளிகள் மூலம் மட்டுமே இனி வருவாய் பெற முடியும்.

 

இதையும் படிங்க: Google பணியாளர்களின் அடிப்படை சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா? பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க....