Google பணியாளர்களின் அடிப்படை சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா? பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க....



google-employee-salary-in-indian-rupees

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள் (Google) நிறுவனத்தின் ஊழியர் சம்பள விவரங்கள் வெளியாகி, தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலரிலுள்ள சம்பளங்கள் இந்திய ரூபாயில் எவ்வளவு என்பதை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.

கூகுள் ஒரு முன்னணி பன்னாட்டு நிறுவனம். இது இணையத் தேடுபொறி, மேகக் கணினி, இணைய விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது. இன்று கூகுள் இல்லாமல் ஒரு நாளை கடத்த இயலாது என்ற நிலையை இது உருவாக்கியுள்ளது.

Google employee salary

கூகுள் ஊழியர் சம்பள விவரங்கள்

2025 ஜூலை 14 தேதியிலான அமெரிக்க டாலர் மதிப்பு ₹85.86 என கணக்கிடப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் ஊழியர்களின் சம்பள விவரங்கள் இங்கே:

இதையும் படிங்க: Video : கல்லூரி வளாகத்தில் தீக்குளித்து அங்குமிங்கும் ஓடிய B. Ed மாணவி! பாலியல் தொல்லை செய்த துறைத் தலைவர்! பதைப்பதைக்கும் வீடியோ....

மென்பொருள் பொறியாளர்கள் (Software Engineers): ஆண்டுக்கு $109,180 – $340,000 → ₹93.75 லட்சம் – ₹2.92 கோடி

ஆய்வு விஞ்ஞானிகள் (Research Scientists): $155,000 – $303,000 → ₹1.33 கோடி – ₹2.60 கோடி

மூத்த மென்பொருள் பொறியாளர் (Senior Software Engineer): $187,000 – $253,000 → ₹1.61 கோடி – ₹2.17 கோடி

Google employee salary

பணியாளர் மென்பொருள் பொறியாளர் (Staff Software Engineer): $220,000 – $323,000 → ₹1.89 கோடி – ₹2.77 கோடி

தொழில்நுட்ப திட்ட மேலாளர் (Technical Program Manager): $116,000 – $270,000 → ₹99.60 லட்சம் – ₹2.32 கோடி

திட்ட மேலாளர் (Program Manager): $125,000 – $236,000 → ₹1.07 கோடி – ₹2.03 கோடி

தயாரிப்பு மேலாளர் (Product Manager): $136,000 – $280,000 → ₹1.17 கோடி – ₹2.40 கோடி

UX வடிவமைப்பாளர் (UX Designer): $124,000 – $230,000 → ₹1.06 கோடி – ₹1.97 கோடி

மேற்கண்ட தொகைகள் அடிப்படை ஊதியம் மட்டுமே. அதில் பங்குச் சலுகைகள் (equity), ஊக்கத் தொகை (bonus), மற்றும் பிற சிறப்பு சலுகைகள் சேர்க்கப்படவில்லை. AI துறையில் உள்ள திறமையானவர்களை ஈர்க்கும் முயற்சியாக, கூகுள் இந்த அளவிலான சம்பளங்களை வழங்குவதாகத் தெரிகிறது.

 

 

இதையும் படிங்க: Video : லண்டனில் பயணிகளுடன் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் திடீரென வெடித்த விமானம்! வெளியான அதிர்ச்சி வீடியோ..