ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
Video : கல்லூரி வளாகத்தில் தீக்குளித்து அங்குமிங்கும் ஓடிய B. Ed மாணவி! பாலியல் தொல்லை செய்த துறைத் தலைவர்! பதைப்பதைக்கும் வீடியோ....
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சி கல்லூரியில் B.Ed படிக்கும் ஒரு மாணவி, தன் துறைத் தலைவர் சமீர் சாஹு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை செய்ததாக கூறி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மாணவிக்கு 90% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், புவனேஸ்வர் AIIMS மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், சிறப்பு மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதற்கு முன்பே சமீர் சாஹு மீது மாணவி மற்றும் மற்ற மாணவியர் பலமுறை புகார் அளித்திருந்தும், கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Video : கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது இன்னொரு கை! பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...
மாணவியின் நண்பிகள் தெரிவித்ததாவது, “தவறான கோரிக்கைகள் வைக்கப்பட்டு, மறுத்தால் மிரட்டல் செய்தார்” என கூறியுள்ளனர். இதன் காரணமாகவே மாணவி இந்த மிகுந்த மனவேதனையில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டார் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தையடுத்து, கல்லூரி முதல்வர் திலீப் குமார் கோஷ் மற்றும் சமீர் சாஹு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமீர் சாஹுவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளதாக பாலசோர் மாவட்ட எஸ்பி ராஜ் பிரசாத் கூறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு போலீஸ் குழு மற்றும் கல்வி அதிகாரிகள் அடங்கிய அரசு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தின் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
ओडिशा के बालेश्वर कॉलेज में छात्रा ने खुद को लगाई आग
◆ HOD समीर साहू पर यौन शोषण का आरोप
◆ प्रिंसिपल दिलीप घोष सस्पेंड, साहू गिरफ्तार#SexualHarassment | College Scandal | #Odisha pic.twitter.com/5h7aX89kpF
— News24 (@news24tvchannel) July 13, 2025
இதையும் படிங்க: Video : லண்டனில் பயணிகளுடன் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் திடீரென வெடித்த விமானம்! வெளியான அதிர்ச்சி வீடியோ..