எங்ககிட்டேவா! தனது சாதுரியத்தால் விமான நிலைய அதிகாரிகளை திக்குமுக்காட வைத்த இளம்பெண்!
எங்ககிட்டேவா! தனது சாதுரியத்தால் விமான நிலைய அதிகாரிகளை திக்குமுக்காட வைத்த இளம்பெண்!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற இளம் பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணம் செய்வதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 9 கிலோ எடை இருந்ததால் அதிகாரிகள் அவரது உடைமைகளை நிராகரித்துள்ளனர். உடனே அந்த பெண் அதிரடியாக முடிவு எடுத்து தனது சூட்கேஸிருந்த தனது உடைகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அணிந்துள்ளார்.
அதன் பின் அவரது சூட்கேஸ் எடை 6.5 கிலோவாக குறைந்தது. தற்போது அதிகாரிகள் அவரை அனுமதித்தனர். தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.