"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!Actor vishal press meet in salem 

இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். இந்த கட்சியுடன் கூட்டணி, இத்தனை சீட்டு ஒதுக்கீடு என்பதை பற்றி எல்லாம் யோசிக்க கூடாது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று மட்டும் தான் யோசிக்க வேண்டும். அதற்காக தான் அரசியலுக்கு வருகிறேன். ஆட்சியில் இருப்பவர்கள் நல்லது செய்து விட்டால் நாங்கள் நடித்துக் கொண்டு மட்டுமே இருந்து விடுவோம். 

கிராமப்புறத்தில் இருக்கும் மக்களுக்கு நல திட்டங்கள் எதுவுமே முழுமையாக கிடைப்பது இல்லை. நான் திமுக, அதிமுக என்று குறிப்பிட்டு குறை சொல்ல விரும்பவில்லை. எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். மாற்றம் தமிழகத்துக்கு நிச்சயம் தேவை. 
என்னை போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்க்க வேண்டும் எனில் மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 

vishal

அப்படி நடந்தால் நடிகர்கள் ஆட்சிக்கு வர ஆர்வம் காட்ட மாட்டோம்.
 நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்கலாமா? என்பதை சங்கர் பொதுக்குழுவில் மட்டும் தான் முடிவெடுக்க முடியும். முக்கிய சங்க நிர்வாகிகளை ஆலோசித்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.