கராத்தேயில் மகன் தேவ் படைத்த சாதனை.! பெருமிதத்துடன் வாழ்த்திய நடிகர் சூர்யா.! செம வைரல் வீடியோ !!surya-son-dev-got-black-belt-in-karate

தமிழ் சினிமாவில் க்யூட்டான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா- ஜோதிகா. இருவரும் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் பேரழகன், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் காதலில் விழுந்த இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் குழந்தைகள் தேவ் மற்றும் தியா இருவரும் விளையாட்டில் பெருமளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சூர்யாவின் மகன் தேவ் தற்போது கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டு பெருமையுடன் மேடையில் தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பிளாக் பெல்ட் வாங்கிய அனைத்து குழந்தைகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.