திடீரென இடிந்து விழுந்த சுற்றுசுவர்.! பரிதாபமாக பறிபோன உயிர்கள்! பதைபதைக்க வைக்கும் வீடியோ!!compound-wall-fall-down-video-viral

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகர் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து சிலர் வழக்கம்போல பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த சுற்றுச்சுவருக்கு அருகே அமர்ந்து இருந்துள்ளனர். அந்த சுவர் மிகவும் பாழடைந்து மோசமான நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென சுற்றுசுவர் எதிர்பாராத விதமாக  இடிந்து விழுந்துள்ளது.
 
சுவர் அங்கு பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்ததில் நான்கு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனை கண்டு பதறிப் போன அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.