அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. கடுப்பாகி விஜய் ஆண்டனி கொடுத்த பதிலடி!! ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!!Vijay antony post about request to fans for romeo movie

தமிழ் சினிமாவில் பல ட்ரெண்டான பாடல்களை இசையமைத்து, ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி. பின்னர் நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன், சைத்தான், கோடியில் ஒருவன் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து அவர் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார், இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருந்தார். மேலும் விடிவி கணேஷ், யோகி பாபு, தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி என பல பிரபலங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஏப்ரல் 11-ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. மேலும் ப்ளூ சட்டை மாறனும் தனது விமர்சனத்தில் ரோமியோ படத்தை நன்றாக இல்லை என்பதுபோல மோசமாக விமர்சித்திருந்தார். 

இதற்கு விஜய் ஆண்டனி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். அவர், நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கும் இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என நம்பி ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் சில அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என பதிவிட்டுள்ளார் . அது வைரலாகி வருகிறது.