வெய்ட்டிங்லையே வெறி ஏத்துதே.!! இன்று வெளியாகும் தலைவர் 171 டீசர்.!! படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் அப்டேட்.!!thalaivar-171-teaser-will-be-out-on-6-pm-today-official

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனினும் கடந்த ஆண்டு வெளியான அவரது ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

tamil cinemaதலைவர் 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தலைவர் 171 திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் ரஜினிகாந்தின் கடைசி திரைப்படம் ஆக இருக்கும் என்று பரவலாக பேச்சு அடிப்படை நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.