உலக பேரழிவிற்கு இந்தியாவும் காரணமா? ஐநா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..!!

உலக பேரழிவிற்கு இந்தியாவும் காரணமா? ஐநா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..!!



world-polution-in-main-reason-india

2030 ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலையால் ஏற்படும் உலக பேரழிவிற்கு இந்தியாவும் ஒரு முக்கிய காரணமாக விளங்கும் என்று ஐநா அறிவித்துள்ளதால் உலக அளவில் இந்தியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஐநாவின் ''இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது . மனித இனத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியதாக உள்ள அந்த அறிக்கை, 400 பக்கங்களை கொண்டதாக உள்ளது. 

Tamil Spark

கடந்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த வெப்பநிலையால் இப்பொழுதுதே பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருக்கிறது. மேலும் இதே நிலை நீடித்தால் இன்னும் வெப்பநிலை உயர்ந்து உலகமே நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையானது 2030 ஆம் ஆண்டு வாக்கில் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இந்த 3.5 டிகிரி செல்சியஸ் என்பது மிக அதிகபட்ச வெப்பநிலை ஆகும். இதனால் தற்பொழுது மெதுவாக உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறை ஆனது கண்டிப்பாக 2030 ஆம் ஆண்டிற்குள் பெரும்பகுதி உருகி உலகமே நீரில் மூழ்கும். அது 2030 ஐ தாண்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளது.

Tamil Spark

ஐநா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களாக விளங்கும் டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இங்கு வெளியாகும் அதிகமான வெப்பத்தின் காரணமாக இந்தியாவையே அதிக வெப்பநிலை உள்ள நாடாக மாற்றும். இதனால் காற்று மாசுபாடு அதிகரித்து மக்களின் இயல்புநிலை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால் 
இந்த இரண்டு நகரங்களையும் "வெப்பமான நகர தீவுகள்" என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள நகரமாக சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. ஆகவே இங்கு நிலவும் அதிகமான வெப்பநிலை மாற்றம் இந்தியப் பெருங்கடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்விளைவாக பல நாடுகளும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tamil Spark


நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் கார், பைக் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை இருமடங்காககும். மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையானது  2020ஆம் ஆண்டிற்குள் மூன்று மடங்காகும். இதனால் வெப்பநிலை அதிகமாகி உலகம் நீரில் மூழ்கும்போது 8 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே நிலப்பரப்பு இருக்கும்.

ஆகவே இந்திய அரசு உயர்ந்துவரும் வெப்பநிலையை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.