சூப்பர் மார்க்கெட்டில் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட இளம் பெண்.. கேமிராவில் சிக்கிய வைரல் வீடியோ காட்சி

சூப்பர் மார்க்கெட்டில் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட இளம் பெண்.. கேமிராவில் சிக்கிய வைரல் வீடியோ காட்சி



Women spite on super market sales man viral video

லண்டன் சூப்பர் மார்க்கெட் போன்றவை பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவர் காசாளர் மீது எச்சில் துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு இதுவரை அதிகாரபூர்வ தடுப்பு மறுத்து கண்டுபிடிக்கப்படாதநிலையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என அந்த அந்த நாட்டு அரசும், உலக சுகாதார மையமும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் லண்டன் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவர் பொருட்களை எடுத்துவிட்டு, அதற்கு பணம் செல்வத்துவதற்காக காசாளர் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் அந்த பெண் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அந்த பெண் கொடுத்த கார்டை வாங்க மறுத்த காசாளர், அந்த பெண்ணை முகக்கவசம் அணியுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். காசாளர் தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தவே, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதோடு அவர் மீது எச்சிலை துப்புகிறார். இந்த காட்சிகள் அங்கியிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

மேலும் சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறும்போது அங்கிருந்த கிறிஸ்துமஸ் ட்ரீ ஒன்றையும் தள்ளிவிட்டு செல்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானநிலையில் அந்த பெண்ணிற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

Video Link: https://metro.co.uk/video/embed/2298430/