அட கொடுமையே..! இப்படிக்கூட திருமணம் நடக்குமா.? இளம் பெண் செய்த வினோத திருமணம்..



Women married briefcase viral news

இப்படியும் கூட திருமணம் நடக்குமா என வியப்பை ஏற்படுத்தியுள்ளார் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர்.

ஒரு பெண் ஆண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதும், ஆண் பெண்ணை திருமணம் செய்துகொள்வதும்தான் வழக்கம் என்றாலும், பல இடங்களில் பலவிதமான வினோத திருமணங்களும் நடந்துதான் வருகிறது. சிலர் தங்களுக்கு பிடித்த செல்ல பிராணிகளை திருமணம் செய்துகொள்வதும், சிலர் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை திருமணம் செய்துகொள்வதும் வழக்கமாகிவருகிறது.

அந்த வகையில் ரஷ்ய நாட்டின் மாஸ்கோ பகுதியைச் சேர்ந்த ரெயின் கோர்டன் (Rain Gordon) என்ற பெண் தனக்கு மிகவும் பிடித்தமான பிரீஃப்கேஸ் ஒன்றை திருமணம் செய்துள்ளார். சிறுவயதில் இருந்தே உயிர் இல்லாத பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த பெண் இந்த பிரீஃப்கேஷை கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹார்டுவேர் ஸ்டோர் ஒன்றில் வாங்கியுள்ளார்.

Viral News

அன்றில் இருந்து இந்த பிரீஃப்கேஸ் மீது மிகுந்த அன்பை காடிவந்துள்ளார் இந்த பெண். இதற்கு இடையில் இளைஞர் ஒருவரை காதலித்த இவர், தனது பிரீஃப்கேஸ் மீது செலுத்திய அன்பை அந்த இளைஞர் மீது செலுத்த முடியவில்லை என கூறி அந்த காதலில் இருந்து வெளியேவந்து, தற்போது இந்த பிரீஃப்கேஸ்ஷை திருமணம் செய்துள்ளார்.