உலகம்

சமையலுக்கு மீன் வாங்க சென்ற ஏழை பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ஷ்டம்.! ஒரே நாளில் கோடீஷ்வரி.!

Summary:

தாய்லாந்து நாட்டில் சாதுன் மாகாணத்தை சேர்ந்த கோட்ச்சகோர்ன் தண்டிவிவாட்குள் என்ற ஏழ்மை பெண்

தாய்லாந்து நாட்டில் சாதுன் மாகாணத்தை சேர்ந்த கோட்ச்சகோர்ன் தண்டிவிவாட்குள் என்ற ஏழ்மை பெண் கடந்த ஜனவரி மாதம் சமைப்பதற்காக மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் மீன் கடையில் இந்திய மதிப்பில் 160 ரூபாய்க்கு கடல் நத்தைகளை வாங்கியுள்ளார்.

இதனையடுத்து மீன் மார்க்கெட்டில் இருந்து வீடு திரும்பிய அவர், கடல் நத்தைகளை உணவுக்காக சுத்தம் செய்துள்ளார். அப்போது கடல் நத்தைகள் ஒவ்வொன்றையும் இரண்டாக பிளந்துள்ளார். அப்போது ஒரு நத்தையில், ஆரஞ்சு வண்ணத்தில் சிறு பளிங்கி கல் போல் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அதனை சோதனை செய்ததில் அது 6 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மெலோ முத்து என்பது தெரிய வந்தது.

அந்த மெலோ முத்தை சோதனை செய்ததில் அது பல கோடிகளுக்கு விற்கும் என தெரியவந்தது. இந்தநிலையில் அவரது தந்தை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும், அவரது தாய் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருவதால் இதனை விற்று வரும் பணம் தனக்கு பேருதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Advertisement