கொரோனா குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்க, வாட்ஸ்ஆப்பில் புதிய கட்டுப்பாடு!



whatsapp-changes-for-control-corono-rumour

சீனாவில் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகள் உட்பட 190 நாடுகளில் தீவிரமாக பரவி கோரதாண்டவமாடி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாளுக்கு நாள்  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்புகளின்  எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. 

Whatsapp

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியநிலையில்,   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421ஆக அதிகரித்துள்ளது. மேலும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய இக்கட்டான தருணத்தில் கொரோனா தொற்று குறித்து சமூகவலைதளங்களில் அவ்வப்போது தவறான வதந்திகள் பரவி வருகிறது

அவ்வாறு வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த தற்போது வாட்ஸ்அப்பில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது . அதன்படி இனி வாட்ஸ்ஆப்பில்  ஒரு தகவலை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸாப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு பகிர முடியும். ஆனால் இனி ஒருவருக்கு மட்டுமே செய்தியை பார்வேர்ட் செய்ய முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் நிறுவனம் விதித்துள்ளது.