வாட்ஸ்அப் செயலிக்கு தடை... பயனர்களுக்கு ஷாக்.. அமலான உத்தரவு.!
தகவல் பாதுகாப்பு விவகாரத்தில், ரஷ்ய அரசு வாட்சப் செயலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்களை வாட்சப் நிறுவனம் இழந்துள்ளது.
வாட்சப் பயன்படுத்த தடை:
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, ரஷ்யாவில் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால் அந்நாட்டில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்த சுமார் 10 கோடி மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் பரிமாற்றம், வணிகம் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்அப் முக்கிய கருவியாக இருந்த நிலையில், இந்த தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா.? வெளியாகும் அறிவிப்பு!
வாட்ஸப்புக்கு மாற்று:
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, தகவல் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கட்டுப்பாடுகள் குறித்து ரஷ்ய அரசு கடுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது. போர் சூழலில் பொதுமக்களின் தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கவும், வெளிநாட்டு தளங்களின் தாக்கத்தை குறைக்கவும், ‘மேக்ஸ்’ (Max) என்ற உள்நாட்டு சமூக வலைதள செயலியை ரஷ்ய அரசு உருவாக்கியது. இந்த செயலியை வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது.
கடும் நடவடிக்கை:
இந்த நிலையில், பயனர்களின் தொலைத்தொடர்பு மற்றும் மெசேஜிங் தொடர்பான தகவல்களை அரசிடம் பகிர வேண்டும் என்ற கோரிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு கொள்கைகளை காரணமாக காட்டி, அந்த தகவல்களை வழங்க முடியாது என வாட்ஸ்அப் தரப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அரசு வாட்ஸ்அப் மீது கடும் நடவடிக்கையை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேவைகள் பாதிப்பு-மக்கள் அவதி:
வாட்ஸ்அப் மட்டுமின்றி, டெலிகிராம் உள்ளிட்ட சில வெளிநாட்டு மெசேஜிங் செயலிகளுக்கும் ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடையால், பொதுமக்கள் மட்டுமின்றி சிறு வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் ஊடகத் துறையினரும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உடனடி தகவல் பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ரஷ்ய அரசின் இந்த முடிவுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதே நிறுவனத்தின் அடிப்படை கொள்கை என்றும், அதில் சமரசம் செய்ய முடியாது என்றும் வாட்ஸ்அப் தரப்பு வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் தகவல் சுதந்திரம் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பும் வகையில், இந்த தடை நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஜோதிடர் பூஜை செய்வதாக கூறி தனி அறைக்குள் 2 மணிநேரம்.... கதற கதற 16 வயது சிறுமியிடம் அத்துமீறல்! ஜாதகம் பார்க்கச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!!!