உள்ளங்கை அளவு.... 350 கிராம் எடை ... உலகின் மிகச் சிறிய குழந்தை... ஆச்சரியத்தில் மருத்துவர்கள்...!!Weight 350 grams...smallest baby in the world...doctors in surprise...

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் ஒருவர் விஷம் குடித்ததாக கூறி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை 350 கிராம் மட்டுமே இருந்தது. அந்த குழந்தை உள்ளங்கை அளவுக்கு சிறிதாக இருந்துள்ளது. குழந்தையை பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். 

பிறந்த குழந்தை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் இருந்தனர். இதைத் தொடர்ந்து குழந்தைக்கும், தாய்க்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 

டாக்டர்களின் சிகிச்சையால் தற்போது குழந்தையின் எடை 3.40 கிலோவாக அதிகரித்துள்ளது. டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை பார்த்து டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்