இந்த ஆண்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா..!!

இந்த ஆண்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா..!!


UN for December India assumed the presidency of the Security Council.

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. 

2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் மாதம் தோறும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. 

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் இந்தியா தலைமை பொறுப்பை வகித்தது. இதை தொடர்ந்து, இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்கு இந்தியா மீண்டும் நேற்று தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. 
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ், ஐ.நாவின் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். 

இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் இந்த மாதத்தில், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் ஐ.நா.வில் நடக்க உள்ளன. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமை தாங்குகிறார்.