ரஷிய இராணுவ வீரரிடம் வார்தைப்போரில் ஈடுபட்ட உக்ரைனிய பெண்மணி.. வைரல் வீடியோ.!

ரஷிய இராணுவ வீரரிடம் வார்தைப்போரில் ஈடுபட்ட உக்ரைனிய பெண்மணி.. வைரல் வீடியோ.!


Ukrainian Brave Woman Argue With Russian Troops Video Goes Viral

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை மீண்டும் ரஷியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வர இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் மீது ரஷிய அதிபரின் உத்தரவின் பேரில், அந்நாட்டு இராணுவம் படையெடுத்து சென்றுள்ளது. உக்ரைனின் நகரங்கள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், முக்கிய அணுசக்தி உலை ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

நேற்று ஒருநாள் போரில் ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் 137 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷிய படைவீரர்கள் 800 பேர் உக்ரைன் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள கேர்சன் நகரின் ஹெனிசெஸ்க் பகுதியில் ரஷிய இராணுவ வீரர்கள் நுழைந்துள்ளார். அப்போது, அங்கிருந்த பெண்மணி ஒருவர் ரஷிய இராணுவ அதிகாரிகளிடம் உள்ளூர் மொழியில் குரலை உயர்த்தி பேச, ரஷிய இராணுவ அதிகாரி அமைதியான குரலில் பதில் சொல்கிறார். உக்ரைன் பெண்ணின் துணிச்சலான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.