காற்று வாங்க விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

காற்று வாங்க விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!


ukraine-woman-walks-onto-airplane-wing-complains-about-heat

உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று துருக்கிலிருந்து புறப்பட்டு உக்ரைனில் உள்ள கியேவில் நகரத்தில் அமைந்துள்ள விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது. விமானம் தரையிறங்கி அதிலிருந்த பயணிகள் வெளியேறுவதற்குள் பெண் ஒருவர் காற்று வாங்க அவசர வழியாக வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் கூறுகையில், விமானம் தரையிரங்கிய பிறகு பயணிகள் ஒவ்வொருவராக வெளியேறினர். அந்த சமயத்தில் அந்த பெண் மட்டும் விமானத்தின் அவசர வாயிலை திறந்து அதன் வழியாக வெளியே வந்து இறக்கையில் நடந்ததாக கூறினார்.

பெண்ணின் இந்த செயலால் உக்ரைன் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ், அந்த பெண்ணின் பெயரை பிளாக் லிஸ்டில் சேர்த்தது மட்டுமின்றி அந்த பெண் அதிக அபராத தொகையை செலுத்த வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.