உலகம்

வீடியோ: பாக்குற நமக்கே மனசு பதறுது!! திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு!! உயிர்பிழைக்க ஓடும் மக்கள்.!! வைரல் வீடியோ..

Summary:

துருக்கி நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வீட்டில் இருந்தவர்கள் தப்பிக்கும் வ

துருக்கி நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வீட்டில் இருந்தவர்கள் தப்பிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

துருக்கி நாட்டில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு வீட்டில் 12 பேர் வசித்துவந்தநிலையில், வீட்டில் இருந்த சிலர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது ஒருவர் வீட்டின் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருக்க, சிலர் சற்று தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, உயிர் தப்புகின்றனர். அதேநேரம், அவர்களது வீடும் பாதியளவு நிலச்சரிவில் சிக்கி இடித்து விழுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

அதேநேரம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement