"யாருக்கு ஓட்டு போடனும்.?" மரியான் பட நடிகையின் வைரல் பதிவு.!actress-parvathi-post-about-voting

18 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகள் உட்பட புதுச்சேரி மற்றும் 112 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து, மீதமுள்ள 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற வருகிறது  கேரளாவில் இருக்கும் 20 தொகுதிகளிலும் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 

Mariyan

இந்த தேர்தலில் வாக்களிக்க திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை பார்வதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஓட்டு போடுவது குறித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

Mariyan

அந்த பதிவில், "மதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். வெறுப்புக்கு எதிராகவும் நாட்டில் வெறுப்பை ஏற்படுத்தி பரப்புபவர்களுக்கு எதிராகவும் ஓட்டு போடுங்கள்." என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.