
Trumph talk about corona
சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிககாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய்க்கு அடுத்த இருவாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீடிப்பதாகவும் இறப்பு விகிதம் அடுத்த இருவாரங்களில் உச்சநிலைக்குச் செல்லும் எனவும், ஜூன் 1ம் தேதிக்கு மேல் தான் கொரோனாவிற்கு விடிவு பிறக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
Advertisement
Advertisement