
தனது பதவிக்காலத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது பதவிக்காலத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது, அவரது ஆட்சி காலத்தில் அவர் பேசிய பொய்கள் அல்லது தவறான கூற்றுகள் எத்தனை என்பது குறித்து ஆய்வு ஒன்று சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி, ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்ற முதல் வருடத்தில் அவர் தினசரி பேசிவந்த பொய், அல்லது தவறான தகவல்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 6 எனவும், அதுவே இரண்டாவது அன்றில் நாள் ஒன்றுக்கு 16 எனவும், மூன்றாவது ஆண்டில் 22 மற்றும் இறுதி ஆண்டில் 39 என நான்கு ஆண்டில் அவர் பேசிய பொய்களின் எண்ணிக்கை 30573 .
டைம் இதழின் அட்டைப்படத்தில் அதிகம் தோன்றி சாதனை படைத்துள்ளதாக கூறியதில் இருந்து தேர்தல் வெற்றி திருடப்பட்டு உள்ளது என கூறியதுவரை அவர் பேசிய பொய் அல்லது தவறான கூற்றுகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக மோசமான சுகாதார உட்கட்டமைப்புக்கு முன்னாள் அதிபர் ஒபாமா தான் காரணம் என கூறியது, டிரம்பின் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
இந்த பொய் பட்டியலில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவை அமெரிக்காவில் தேர்தல் நெருங்கிய கடைசி 5 மாதத்தில் தெரிவிக்கப்பட்டவை என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement