தைய்வானை புரட்டி போட்ட சூறாவளி.. பீதியில் மக்கள்..!

தைய்வானை புரட்டி போட்ட சூறாவளி.. பீதியில் மக்கள்..!



the-typhoon-that-overturned-taiwan-people-in-panic

​​​​​​தைய்வானை தாக்கிய கொய்னு சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலில் கடந்த வாரம் உருவான சூறாவளி மெல்ல மெல்ல நகர்ந்து கெங்சன் மாகாணத்தை மணிக்கு 252 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கியது.

இந்த சூறாவளி புயலின் கோரத்தாண்டவத்தில் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Taiwan

இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த சூறாவளியில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.