அட்டைப்பெட்டி என நினைத்து பணியாளரை நசுக்கிய ரோபோ.! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.?

அட்டைப்பெட்டி என நினைத்து பணியாளரை நசுக்கிய ரோபோ.! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.?



the-robot-that-took-the-life-of-the-employee

தென்கொரியாவில் செயல்பட்டு வரும் ஒரு விவசாய விலை பொருள் விநியோக மையத்தில் காய்கறி பெட்டிகளை எடுத்து பேக்கிங் செய்யும் பணி ரோபோக்களை கொண்டு செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் தான், ரோபோவின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என அந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த ஊழியரை காய்கறி பெட்டி என நினைத்துக் கொண்ட ரோபோ, அவரை தூக்கி கன்வேயர் பெல்ட்டில் வைத்துள்ளது.

Coria

ரோபோவின் எதிர்பாராத இந்த செயலால், அதன் பிடியிலிருந்து தப்ப முடியாத ஊழியர், திணறியிருக்கின்றார். அதன் பிறகு கன்வேயர்பெல்டினுள்ளே போன அந்த ஊழியரின் மார்பு, முகம் போன்ற பகுதிகள் நசுங்கின. இதனால் படுகாயமடைந்த அந்த ஊழியரை சக பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் ரோபோவின் செயலால், பலத்த காயமடைந்த அந்த ஊழியர், தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கு முன்னதாக, கடந்த மே மாதத்தில் தென்கொரிய நாட்டில் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில், ரோபோவிடம் சிக்கி அங்கே பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Coria

மேலும் அமெரிக்கன் ஜர்னல் ஆப் இண்டஸ்ட்ரியல் மெடிசின் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி 1992 முதல் கடந்த 2017 ஆம் ஆண்டு வரையில், அமெரிக்க நாட்டில் தொழில் துறையில் பயன்படுத்தப்படும் ரோபோக்களால் 41 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.