தித்திப்பு செய்தி.. இனி பாலியல் அத்துமீறல் குற்றத்தில் ஈடுபட்டால் "அது" துண்டிக்கப்படும் - அதிரடி சட்டம் அமலானது..!

தித்திப்பு செய்தி.. இனி பாலியல் அத்துமீறல் குற்றத்தில் ஈடுபட்டால் "அது" துண்டிக்கப்படும் - அதிரடி சட்டம் அமலானது..!



Thailand Govt Approve

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் மசோதா அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க சில நாடுகளில் மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறான நாடுகளில் பாலியல் பலாத்கார குற்றங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. எண்ணிக்கையில் மிகக்குறைவுதான். அது தனிமனித ஒழுக்கத்தால் மட்டுமே பூஜ்யமாகும். 

தாய்லாந்தில் கடந்த 2013 முதல் 2020 வரை 16 ஆயிரம் பேர் பாலியல் குற்றவாளிகளாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4,848 பேர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு அரசு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, ஒரு முறை பாலியல் பலாத்கார குற்றத்தில் சிக்கி மீண்டும் அதே குற்றத்தை செய்தால், குறித்த நபருக்கு இரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் வழிவகைக்கு உட்படுத்தலாம் என்ற மசோதாவானது தாய்லாந்து செனட் சபையால் நிறைவேற்றப்பட்டுள்ளது.