மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரத் தீ .. தீயில் கருகி 10 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 15 வது மாடியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் அலறல் சத்தம் கேட்டது. பீதியில் மக்கள் அங்கும் இங்கும் ஓடியதில் அடுக்குமாடி குடியிருப்பில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இச்சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், சிலர் படுகாயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.