ஒன்றரை வயது குழந்தை விளையாடும்போது நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கதறி துடிக்கும் பெற்றோர்..

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் மாவ்டி பகுதியில், குழந்தையின் உயிரை இழக்கச் செய்த வேதனையான சம்பவம் மக்கள் மனதை கலங்கவைத்துள்ளது. தேஜஸ்பாய் சாவ்தா என்பவரின் ஒன்றரை வயது மகள் பார்த்தவி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் பந்தை தவறுதலாக விழுங்கியதனால் உயிரிழந்தார்.
பந்தை விழுங்கியதும் மூச்சுத் திணறல்
மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த பார்த்தவி, தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பந்தை விழுங்கி உடனடியாக மூச்சுத் திணறல் அடைந்தார். உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த பெற்றோர், அருகிலுள்ள ஜனானா மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை தொடங்குவதற்குமுன், சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் திடீர் மரணம், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பெரியவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மரணம் அந்த பகுதியில் சோகநிலையை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: மெட்ரோ ரயிலில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை! கவனிக்காத பெற்றோர்! வைரலாகும் வீடியோ...
போலீசார் விசாரணை ஆரம்பம்
மருத்துவமனை ஊழியர்கள், சம்பவம் குறித்து உடனடியாக ராஜ்கோட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கியுள்ளதுடன், மரணத்தை தொடர்புடைய வழக்காக பதிவு செய்துள்ளனர்.
பெற்றோர்களுக்கான கடுமையான எச்சரிக்கை
இந்த சம்பவம், சிறிய குழந்தைகள் விளையாடும்பொழுதது, அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மிகுந்த பாதுகாப்புடன் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கான ஒரு வலியுறுத்தலாகும்.
மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள, குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் சிறந்த தரம் மற்றும் பாதுகாப்பை முன்னிட்டே தேர்வு செய்ய வேண்டும் என்றும், அவசரநிலைகளில் முதலுதவிக்கு தேவையான விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்துகின்றனர்.